சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் மற்றும் காய்கறிகளில் அதிகளவிலான ரெஸ்வெராட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளன.
இந்த நிலையில் தற்போது சிவப்பு நிற முட்டைக்கோசினை உணவில் சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
- ஆன்டிஆக்ஸிடன்ட் செல்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் தாக்கப்படுவதைத் தடுக்கிறது.
- புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல்கள் முக்கிய காரணமாகும்.
- இதன் சாறு உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்தை நீக்குகிறது.
- இதில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை உருவாவதையும் தடுக்கிறது.
- அல்சர், பெப்டிக் அல்சர் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகள் வராமல் தடுக்கும்.
- கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் இதர தாதுக்கள் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கின்றன.
- சிவப்பு முட்டைக்கோஸ் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
- சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே அல்சைமர் நோயிலிருந்து பாதுகாக்கிறது.