இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மகப்பேறு மருத்துவர் சனத் லானெரோல்தெரிவித்துள்ளார்.

எனவே கர்ப்பிணிப் பெண்களை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேசமயம் தடுப்பூசிகள் பிறக்காத குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

மேலும் வேலைக்கு செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் முடிந்தால், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version