இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிரபலம்!!!

இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்கான முதற்கட்ட 10 வீரர்கள் மற்றும் 10 வீராங்கனைகளை செஸ் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் அடுத்த வியாழக்கிழமை முதல் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

Viswanathan Anand, Indian chess grandmaster extraordinaire, is 50 — Quartz  India

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்ள ஆண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள வீரர்கள்:-

விதித் குஜராத்தி, பி ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின், எஸ் எல் நாராயணன், கே சசிகிரண், பி அதிபன், கார்த்திகேயன் முரளி, அர்ஜுன் எரிகைசி, அபிஜீத் குப்தா மற்றும் சூர்யா சேகர் கங்குலி ஆகியோர் ஆவர்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்ள பெண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள வீரர்கள்:-

கோனேரு ஹம்பி, டி ஹரிகா, வைஷாலி ஆர், டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி, வந்திகா அகர்வால், மேரி ஆன் கோம்ஸ், சௌமியா சுவாமிநாதன் மற்றும் ஈஷா கரவாடே ஆகியோர் ஆவர்.

இவர்களில் ஆசிய செஸ் தொடரில் கலந்து கொள்வதற்கான இறுதி கட்ட 5 வீரர்களை ஏப்ரல் மாதம் தேர்வுக்குழு முடிவு செய்யும்.

Exit mobile version