இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்குமுதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு(முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் அண்மையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான எலும்பியல் மற்றும் முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணராவார்.
இவர் கடந்த திங்கள்கிழமை இலங்கைக்கு வந்துள்ளதுடன் கொழும்பு நவலோகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
பேராசிரியர் நூர்தீனுடன் மயக்க மருந்து நிபுணரும் வந்திருந்ததுடன் பிரதமருக்கு சிகிச்சை அளித்த பின்னர் இருவரும் அன்றிரவே பிரித்தானியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் இலங்கை வந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை அளித்தமை தொடர்பான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.
அண்மையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.