Home மருத்துவம் கொய்யாவில் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்! இந்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிடவும்

கொய்யாவில் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்! இந்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிடவும்

0

வயிற்றில் ஏற்படும் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு கொய்யா தீர்வுகளை கொடுக்கின்றது. தவறான உணவுப் பழக்கம், செயலற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவற்றால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வற்றான பிரச்சனைகள் உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.

மேலும் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த கொய்யாவில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இது தவிர, கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவையும் கொட்டிக்கிடக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன.

வயிற்று வலி பிரச்சனைக்கு தீர்வு : கொய்யாவை சரியான முறையில் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். கொய்யாவை மென்று சாப்பிடுங்கள், ஆனால் அதன் விதைகளை மென்று சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் வயிற்று வலி பிரச்சனையை அதிகரிக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு : கொய்யா மலச்சிக்கலை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொய்யாவில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.

பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு : பைல்ஸ் பிரச்சனை குணப்படுத்த, முதலில் மலச்சிக்கலை குணப்படுத்துவது அவசியம். அதனால், கொய்யா சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கலுக்கான தீர்வு உடனே கிடைக்கும். இதன் மூலம் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

வாயு மற்றும் அமிலத்தன்மை சிக்கலை தீர்க்கும் : கொய்யாப்பழம் உட்கொள்வதால் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் தேங்கியிருக்கும் வாயுவையும் வெளியேற்றும். வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் கொய்யாவின் பலன்கள் இவை என்பதால், வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இதனைக் கருதக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version