இலங்கையில் சூழலுக்கு நிமிடத்திற்கு நிமிடம் கழிவாக மாறும் 50 ஆயிரம் முகக்கவசங்கள்…

நாட்டில் ஒவ்வொரு வினாடிக்கும் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட 50 ஆயிரம் முகக் கவசங்கள் சுற்று சூழலுக்கு கழிவாக சேர்க்கப்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயம் சர்வதேச தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுபுன் லஹிரு பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சர்வதேச நாடுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஒவ்வொரு வினாடிக்கும் 30 இலட்சம் முகக் கவசங்கள் சூழலுக்கு கழிவாக சேர்க்கப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பாவனை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில், பெருமளவான முகக் கவசங்கள் முறையற்ற விதத்தில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அகற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வருடம் ஒன்றிற்கு 1.56 பில்லியன் முகக் கவசங்கள் கழிவுகளாக கடலில் சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து சர்வதேச அளவில் சூழலுக்கு விடப்படும் மருத்துவ கழிவுகளின் அளவு 87 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சூழலுக்கு விடுவிக்கப்படும் முகக் கவசங்கள் ஊடாக விலங்குகளுக்கு பாரிய அளவில் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version