Home இலங்கை இரண்டு மடங்காக உயரும் மின் கட்டணம்

இரண்டு மடங்காக உயரும் மின் கட்டணம்

0

இலங்கையில் நப்தா கையிருப்பு இல்லாமையால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 600 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்க இது வழி வகுக்கும் எனவும் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் ரூபா 600 மில்லியனாக இருந்தால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 650 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒரு லீற்றர் டீசலை விட நாப்தாவின் விலை 35 ரூபாய் குறைவு என்றும் உலை எண்ணெய் விலை 60 ரூபாய் குறைவு எனவும் குறிப்பிட்டார். எனினும், எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி உலை எண்ணெய் மற்றும் நப்தா பாவனையை நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.

அதேசமயம் இலங்கையில் மாத்திரம் எரிபொருளின் விலை 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பாலித, உலகளாவிய எரிபொருள் விலையின் அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விலை உயரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஊழலுக்கு மத்தியில் நாட்டை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளும் வகையில் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதா கூறிய அவர், வாழ்க்கைச் செலவும் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும்குறிப்பிட்டார்.

மேலும் , இந்த அதிகரிப்புக்கு காரணமான அமைச்சர் தற்போது அதற்காக பல்வேறு காரணங்களை முன்வைத்து வருவதாகவும் ஆனந்த பாலித தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version