Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-02-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-02-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய இனிமையான சம்பவங்களை நினைவுக்கு வரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். முக்கிய காரியங்கள் காலதாமதின்றி நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, கோபமும், பிடிவாதமும் உங்கள் பலத்தை குறைக்கும். தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் பொறுப்புணர்வு அதிகமாகும். புதிய பாதையில் பயணிக்கத் விருப்பம் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராதது நடக்கும். எதிரிகள் விலகி நிற்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் கட்டுங்கடங்காத செலவுகள் வரும். எல்லா காரியங்களும் தடையின்றி நிறைவேறும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு ராசி

நேயர்களே, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். பண வரவில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வு வரும். மன சோர்வு உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர் வழியில் சிலர் நெருக்கடிகள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சகஜ நிலை காணப்படும்.

மீன ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பெற்றோரின் நலனில் அக்கறைகொள்ளவும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version