Home மருத்துவம் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் நூக்கல்

வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் நூக்கல்

0

நூக்கல் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.

நூக்கலில் காலோரிகள் குறைவு, மேலும் உடல் எடை அதிகரிக்காது. நூக்கலில் வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளன.

நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.

நூக்கலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.

நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது. நூக்கலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

நூக்கல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நூக்கலானது நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. மேலும் பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version