டீசல் கொள்வனவு-அமைச்சரவை விடுத்த புதிய அறிவிப்பு!

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் 40 ஆயிரம் மெற்றி தொன் டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்து தொடர்பாக எரிசக்தி அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுடன் இதன் விளைவாக டீசல் தொகையை வழங்க இந்திய நிறுவனம் இணங்கியுள்ளது.

அதேவேளை 180 நாள் கடன் அடிப்படையில், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு தேவையான 4 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை சைப்ரஸ் நாட்டின் டெராநோவிஸ் குழுமத்திடம் இருந்து கொள்வனவு செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் உதய கம்மன்பில இவை சம்பந்தமான அமைச்சரவை பத்திரங்களை அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை எதிர்நோக்கி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள், அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.

இதன் காரணமாக உள்நாட்டில் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் டீசலை மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Exit mobile version