பிந்திய செய்திகள்

கட்டாய சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஐரோப்பிய நாடு

சில நாடுகள் ஏற்கனவே முதியவர்கள் அல்லது சுகாதார ஊழியர்கள் கொவிட் தடுப்பூயை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளன.

எனினும் எந்த ஐரோப்பிய நாடும் தமது நாட்டுக்கு குடிமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வரவில்லை.

இந்நிலையிலேயே ஒஸ்ரியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு அமைய கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மறுக்கும் நபருக்கு 670 அமெரிக்க டொலர்கள் முதல் 4 ஆயிரம் டொலர் வரையிலான அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தரப்பினர் தடுப்பூசி கட்டாயம் என்ற தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்திருந்த பின்னணியிலேயே ஒஸ்ரியா அந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் ஒஸ்ரியா குடிமக்களின் 72 வீதமானவர்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையிலும் கொவிட் தடுப்பு நடவடிக்கைக்காக ஒஸ்ரியா இவ்வாறான கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடாக ஒஸ்ரியா மாறியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts