ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்குவிடுத்துள்ள கருத்து

இலங்கையில் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது அவசர மின்சாரம் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை கூறியுள்ள அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண, தேவைப் ஏற்பட்டால் மின்சாரத்தை கொள்வனவுத் செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூன்று வருடங்களுக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்திருந்த நிலையில், அதற்கு அரசாங்கம் உடன்படவில்லை எனவும் அவர் கூறினார்.

தேவை ஏற்படும் போது மாத்திரம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மீண்டுமொரு முறை பேச்சுக்களை நடாத்துமாறும், மீண்டுமொரு முறை விலைமனு கோருமாறும் மின்சக்தி அமைச்சருக்கு அரச தலைவர் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version