இன்று (03) வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை வளப்படுத்தும் “ஒரு இலட்சம் வேலைகள் அபிவிருத்தி திட்டம்” நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) “நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” என்ற திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, ஒரு கிராம சேவகர் பிரிவில் 05 அல்லது 06 திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளம் காணக்கூடிய செயன்முறை முழுமையாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தேவையான தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது