Home சினிமா தளபதி விஜய் கிளிக் செய்த புகைப்படம்-மகிழ்ச்சியடைந்த இயக்குனர்கள்

தளபதி விஜய் கிளிக் செய்த புகைப்படம்-மகிழ்ச்சியடைந்த இயக்குனர்கள்

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் மிகவும் பிசியாகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப் படத்தை சன் பிக்சர்ஸ் திரைப்படம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப் படத்தில் வில்லனாக கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதுபோல் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லீ இயக்கி இருந்தார். இந்த மூன்று இளம் இயக்குனர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் கிளிக் செய்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version