யாழில் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டி

இன்று (05) உலகத் தழிழர் பேரவையால் யாழ்ப்பாண மாவட்ட சம்மேளனத்துடன் இணைந்து வேகச் சதுரங்கச் சுற்றுப்போட்டியொன்று யாழ். இலங்கை வேந்தன் கல்லூரியில் இடம்பெற்றது.

இப்போட்டியானது ELO என்னும் சர்வதேச தரவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு முன்னிரிமை என்னும் அடிப்படையில் நடத்தப்பட்டன.

நாடு முழுவதிலிருந்தும் 200 போட்டியாளர்களைக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் மொத்தமாக ரூபா 118, 000.00 பணப்பரிசில்களுடன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

Gallery