Home இலங்கை யாழில் இந்தியாவின் எத்தனை படகுகள் ஏலத்தில் விற்பனை செய்ய பட்டது தெரியுமா?

யாழில் இந்தியாவின் எத்தனை படகுகள் ஏலத்தில் விற்பனை செய்ய பட்டது தெரியுமா?

0

நேற்றையதினம் யாழின் காரைநகரில் வைத்து 135 இந்திய படகுகள் ஏலம் விடப்பட்டது. சுமார் 52 இலட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்றபன செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து வந்தடைந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது 135 படகுகள் 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் போனது. இதில் ஒரு படகு அதிகபட்சமாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version