Home மருத்துவம் லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா நீங்கள் இதை ஒரு முறை படித்து பாருங்கள்

லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா நீங்கள் இதை ஒரு முறை படித்து பாருங்கள்

0

தற்காலத்தில் பெண்களின் ஒப்பனை, லிப்ஸ்டிக் இல்லாமல் முழுமை பெறாது. அது முகத்திற்கு சட்டென்று அழகு சேர்க்கும். கவர்ச்சியாக காண்பிக்கும். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில், இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான லிப் க்ளோஸ், லிப்ஸ்டிக்கில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நச்சு பொருட்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக லிப்ஸ்டிக் பூசிக்கொள்வது நீண்டகால உடல் நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

குறிப்பாக 24 மணி நேரத்துக்குள் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதிலிருக்கும் குரோமியம் அளவு உடலில் அதிகரிக்கும் அபாயம் உண்டாகும். இது வயிற்று கட்டிகளுடன் தொடர்புடையது.

லிப்ஸ்டிக்கில் காணப்படும் வேறு சில நச்சுப் பொருட்கள்:

  • லிப்ஸ்டிக்கில் இருக்கும் பித்தலேட்டுகள் என்னும் ரசாய னம் நாளமில்லா சுரப்பி அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
  • இதில் கலந்திருக்கும் ஈயம், நீண்ட கால ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது.
  • பாலி எத்திலின் கிளைகோல்கள் கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளிலும் உள்ளன. அவை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக்கூடியவை.
  • பாரபென் எனப்படும் ஒருவகை மெழுகுகள் உதட்டுச்சாயத்தில் காணப்படுகின்றன. அவை சருமத்தில் எளிதில் ஊடுருவுகின்றன. மனச்சோர்வு, வயிற்றுப்போக்கு உட்பட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மனதில் கொள்ள வேண்டியவை

  1. அடர் நிற லிப்ஸ்டிக்கள் அதிக அளவில் நச்சு ரசாயனங் களின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.
  2. லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு ஒரு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு நேர்வதை தடுக்கும்.
  3. நச்சு இல்லாத அல்லது இயற்கையான உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.
  4. கர்ப்பகாலத்தில் லிப்ஸ்டிக் பயன்பாட்டை தவிருங்கள். அவை கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.
  5. ஒரு வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version