பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் இதனைத் தெரிவித்தார்.
உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலக மக்கள் தொகையில் முழு அளவில் 50 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில் நாம் இருக்கிறோம்.
சர்வதேச அளவில் நோயெதிர்ப்பு பெறுவதற்கான பிரசாரம் வெற்றி பெறுவதற்கு உறுதுணை புரியும் அடுத்த கட்ட முயற்சிகள் தேவையாக உள்ளன.
இதுவரை 165 நாடுகளுக்கு, 170 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கி ஐரோப்பியா உதவி செய்துள்ளது’ என கூறினார்.