Home தொழினுட்பம் விண்ணுக்கு செல்லும் போது திடீரென சிதறிய ராக்கெட்!

விண்ணுக்கு செல்லும் போது திடீரென சிதறிய ராக்கெட்!

0
விண்ணுக்கு செல்லும் போது திடீரென சிதறிய ராக்கெட்!

நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்ட்ரா (Astro Rocket). குறித்த நிறுவனம் நாசாவுடன் இணைந்து முதல் முறையாக தனது ராக்கெட்டின் மூலம் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்தது.

அதன்படி நேற்றைய தினம் (11-02-2022) புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் ராக்கெட் நாசாவின் 4 செயற்கைகோள்களுடன் விண்ணை நோக்கி பாய்ந்தது.

ஆனால் பூமியில் இருந்த புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ராக்கெட் திடீரென வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து ராக்கெட்டின் பாகங்கள் அண்டார்டிக் பெருங்கடலில் விழுந்தன.

இதுகுறித்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் கெம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “எங்கள் நிறுவன ராக்கெட்டின் முதல் பயணத்தில் ஒரு சிக்கலை எதிர்கொண்டோம்.

எங்கள் வாடிக்கையாளரின் (நாசா) செயற்கைகோள்களை பூவிவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version