Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-02-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-02-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, புதிய நட்பால் நிறைய நன்மைகள் உண்டு. நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

அன்பகளே, குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட நேரிடும். பொருளாதார நிலை உயரும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். அண்டை அயலாரிடம் கவனமுடன் செயல்படல் நன்று. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். பிரியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதம் வந்து போகும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ரசி

அன்பர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். எதிரிகள் விலகி நிற்பர். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். பல நாள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

அன்பர்களே, மனக்கவலைகள் அடியோடு மறையும். வெளியிடங்களில் வார்த்தைகளை அளந்து பேசவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீன ராசி

அன்பர்களே, தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். புது தொழில் யோகம் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version