நீங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ளும் இல்லத்தரசிகள் ஆக இருந்தாலும் சரி, அல்லது வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய சந்தோஷத்திற்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றியும், செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக எப்போதுமே மன அழுத்தத்தோடு கஷ்டத்தோடு கவலையோடு வாழக்கூடிய இல்லத்தரசிகள் இந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.
முதல் விஷயம். எந்த பெண்ணாலும் அடுத்தவர்களைப் பற்றி குறை கூறாமல் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாமல் இருக்கவே முடியாது என்று ஒரு கூற்று உள்ளது. அதாவது பெண்களை தவறாக சொல்ல வரவில்லை. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் ஆக இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய வீட்டிற்கு சென்று அல்லது அவருடைய வீட்டு வாசலில் அமர்ந்து, அந்த இடத்தில் இல்லாதவர்களைப் பற்றி குறை சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி தினம்தோறும் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடன் கதை பேசும் பழக்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது. இன்று நாம் வேறு ஒருவரை பற்றி புறம் பேச, நாளை நம்மைப் பற்றி மற்றவர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள். இது அப்படியே அரசல்புரசலாக நம் காதில் வந்து விழும். அதன்பின்பு அந்த பிரச்சனை நமக்கு மன அழுத்தத்தை நாளடைவில் உண்டுபண்ணி விடும்.
அடுத்தபடியாக, அடுத்தவர்கள் அவர்களுடைய குடும்ப விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, வேறுவழியே இல்லாமல் நம் குடும்ப விஷயத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நம் தள்ளப்படுவோம். அது நமக்கு சிக்கலை கொடுத்துவிடும். இதற்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசக்கூடாதா? அது ஒரு தப்பா? என்று கேள்வி எழுப்ப வேண்டாம். சாப்பிடுவது தூங்குவது போல இந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விடக்கூடாது என்றுதான் சொல்கின்றோம்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் எப்போதுமே குடும்பத்திற்காக மட்டும் உழைக்கக் கூடாது. தன்னை பற்றியும் யோசிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தை விட்டு விட்டு, மீதம் இருக்கும் நேரத்தில் ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரமாவது நீங்கள் உங்களைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள். அது உங்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். உங்கள் அழகு சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். உங்கள் மனதிற்கு என்ன விஷயம் பிடிக்குமோ அதை நீங்கள் உங்களுக்காக செய்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.
மூன்றாவது விஷயம். பொதுவாகவே பெண்கள் அடுத்தவர்களை ஒப்பிட்டு பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆங்கிலத்தில் கம்பேரிசன் என்று சொல்லுவார்கள் அல்லவா.
ஒரு எடுத்துக்காட்டுக்கு யாரோ உங்களுடைய உறவினர்களோ, நண்பர்களோ, யாரோ ஒருவர் அவர்களுடைய புகைப்படத்தை எடுத்து, சொந்தமாக வாங்கிய வீடு, வாகனம், அல்லது ஏதோ ஒரு வெளியூருக்கு டூர் செல்லும் போது, புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கிலோ அல்லது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவார்கள். அதை பார்த்துவிட்டு ‘இவர்கள் மட்டும் எவ்வளவு சந்தோஷமாக உள்ளார்கள். நம்மால் இது போல வாழ முடியவில்லையே.’ என்று உடனே அந்த குடும்பத்தோடு தன் குடும்பத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள். இது ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம். ஒரு ஸ்டேட்டஸை வைத்து, ஒரு புகைப்படத்தை வைத்து அடுத்தவர்களுடைய குடும்பச் சூழ்நிலையை, நம்முடைய குடும்ப சூழ்நிலையையும் ஒப்பிட்டு மனதைப் போட்டு குழப்பிக் கொண்டால் குடும்பத்தில் பிரச்சினைகள் தான் அதிகமாகும்.
நான்காவதாக, பெண்களிடம் எப்போதும் இருக்க வேண்டியது பாசிட்டிவிடி. எதிர்மறையான சிந்தனைகள், எதிர்மறையான பேச்சுகள், எதிர்மறையான எண்ணங்கள், பெண்களிடம் இருக்கவே கூடாது. உங்களிடம் யார் வந்து பேசினாலும் அவர்களிடம் நீங்கள் நேர்மறையான வார்த்தைகளை கொண்டு தான் பேச வேண்டும். நீங்கள் போய் யாரிடமாவது பேசினாலும் அவர்களை தாழ்த்தியோ, குறைத்தோ பேசவே கூடாது. கடுஞ் சொற்களைக் கொண்டு பேசக்கூடாது. அமைதியாக நம்முடன் பேசுபவர்களுக்கு ஒரு ஆதரவாக, அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் தான் பேச வேண்டும். பெண்கள் என்றால் பாசிட்டிவா இருக்கணும். பாசிட்டிவ் என்றாலே அது பெண்களிடத்தில் தான் இருக்கணும். அப்படின்னு வச்சுக்கோங்க.
அவ்வளவு தாங்க. இதையெல்லாம் நாம் சரியாக பின்பற்றி வந்தாலே இறுதியாக நமக்கு ஒரு விஷயம் கிடைத்துவிடும். அதுதான் தன்னம்பிக்கை. செல்ஃப் கான்ஃபிடன்ஸ். நாம எல்லா விஷயத்தையும் சரியான முறையில்தான் கையாளுகின்றோம் என்ற தன்னம்பிக்கை பெண்கள் மனதிற்குள் வந்துவிட்டால், அவர்களிடத்தில் ஒரு தெளிவு பிறக்கும். அது சில சமயம் லேசான கர்ப்வமாக தலைதூக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை என்பது எந்த இடத்திலும் தன்னடக்கத்தை மீறி விடக்கூடாது.
- சபையில் இல்லாத ஒருவரை பற்றி, பின்னால் புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
- நம்மை அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் போல நம்மால் வாழ முடியவில்லையே என்று கம்பேர் செய்யக்கூடாது.
- இல்லத்தரசிகள் அடுத்தவர்களுக்காக மட்டும் வாழ்நாள் முழுவதும் உழைக்க கூடாது. தங்களுக்காகவும் தங்களுக்கு பிடித்த விஷயத்திலும் நேரத்தை கவனத்தை செலுத்த வேண்டும்.
- பெண்கள் எப்போதுமே பாசிட்டிவாக நடந்து கொள்ள வேண்டும்.
- தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு துணிந்து வாழ்க்கையை நடத்தி சென்றால் எல்லாம் வெற்றிதான். உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் ஆர்வம் இருந்தால் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும்.