Home இலங்கை 28 வீதத்தால் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

28 வீதத்தால் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

0

இன்று (திங்கட்கிழமை ) முதல் அமுலுக்கு வரும் வகையில் 28 வீதத்தால் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக கூடுதலாக 15,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி பெப்ரவரி மாதம் முதல் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் சமுர்த்தி வங்கிகள் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version