Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-02-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-02-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, சொந்த காரியங்களில் அதிக அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் நேசம் கரம் நீட்டுவர். அநாவசியச் செலவுகளை குறைக்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மன நிம்மதி உண்டு. மற்றவர்களின் ஆலோசனையை ஏற்க தயக்கம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, பழைய பிரச்சனைக்கு முக்கிய தீர்வு கிடைக்கும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பிரபலங்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் நன்மை பயக்கும் விஷயங்கள் நடக்கும். முடியாமல் இருந்த காரியம் கூட சீக்கிரத்தில் முடியும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். மனப்போராட்டங்கள் குறையும். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

நேயர்களே, எதிர்காலம் பற்றிய யோசனை இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மகர ராசி

நேயர்களே, மனதில் உள்ள திட்டங்கள் நிறைவேறும். நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version