Home மருத்துவம் பாலுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!!

பாலுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!!

0

பாலை பலரும் சூடாகவோ அல்லது குளிராகவோ பருக விரும்புகிறார்கள். சிலர் பாலுடன் சாக்லேட் கலந்து ருசிப்பார்கள். பால் ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகும். பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பாலுடன் சில உணவு பொருட்களை ஒருபோதும் சேர்க்கக்கூடாது. அவை உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும். பாலுடன் சில பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்

மீன் – பால்:

ஏன் பாலுடன் மீன் சாப்பிட கூடாது? உண்மைகள் அறிவோம் - Logical Tamizhan

பால் குளிர்ச்சி தன்மை கொண்டது. மீன், வெப்பத்தன்மை கொண்டது. இவை இரண்டும் சேர்ந்த கலவையானது உடலில் ரசாயன மாற்றங் களுக்கு வழிவகுக்கும். உடலில் சம நிலையின்மையை உருவாக்கும். மீன் மட்டுமின்றி பிற இறைச்சி வகைகளையும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. அவை செரிமான பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

பால் – வாழைப்பழம்:

பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும் வழக்கம் நெடுங்காலமாக நடைமுறையில் இருக்கிறது. அப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ‘‘பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒருசேர சாப்பிடும்போது ஜீரணமாவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால் சோர்வாக இருப்பதை போல் உணர்வீர்கள்’’ இவை இரண்டும் சத்தான பொருட்கள்தான் என்றாலும் தனித் தனியே சாப்பிடுவதுதான் பாதுகாப்பானது.

பால் – முலாம்பழம்:

பாலுடன் நிறைய பழங்களை கலந்து சாப்பிடுவதோ, ஜூஸாக பருகுவதோ ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பால் மலமிளக்கியாக செயல்படக்கூடியது. பாலுடன் முலாம் பழம் கலப்பது நல்லதல்ல. அது டையூரிடிக் பண்புகளை கொண்டது. அவற்றை ஒன்றாக சேர்ப்பது செரிமான பிரச்சினைக்கு வழிவகுப்பதோடு உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும். வாந்திக்கும் வித்திடும்.

முள்ளங்கி – பால்:

முள்ளங்கி பெரிய அளவில் பக்க விளைவுகளை ஏற் படுத்தாது. இருப்பினும் சாப்பிடுவதற்கு முன்பு முள்ளங்கியை தனியாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெப்பமான தன்மை காரணமாக வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஆயுர் வேதத்தின்படி, முள்ளங்கியை உண்ட பிறகு பால் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது பொருந்தாத உணவுக்கலவையாக கருதப்படுகிறது.

‘‘முள்ளங்கியை பாலுடன் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதை உடனடியாக நிறுத்த வேண்டிய நேரம் இது. ஏனெனில் அவை செரிமான செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும். முள்ளங்கியில் செய்த உணவு பொருட்களை சாப்பிட்டதும், இரண்டு மணி நேரம் கழித்து பால் பருகலாம்’’ என்கிறார், மருத்துவர் பிரீதம்.

பால்-எலுமிச்சை:

போன்ற சிட்ரஸ் அல்லது அமிலப் பொருட்களைக் கலக்காதீர்கள். வைட்டமின் சி நிறைந்த பழங்களையும் பாலுடன் உட்கொள்ளக்கூடாது. ஏன் தெரியுமா? பால் ஜீரணமாகுவதற்கு அதிக நேரம் எடுக்கும். ஒருவர் பால், எலுமிச்சை அல்லது சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சேர்க்கும்போது பால் நொதித்துவிடும். வாயு மற்றும் நெஞ்செரிச்சலை வரவழைத்து, உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும். சிலருக்கு நெஞ்செரிச்சல், சளி, இருமல், தடிப்புகள் மற்றும் ஒவ்வாமைைய ஏற்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version