Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (17-02-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (17-02-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (17-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் நிறைய அனுபவத்தை பெற முடியும். திருமண முயற்சி கைகூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, பிரியமானவர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். உறவினர்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுக்காக உதவி செய்ய நேரிடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பம் கலகலப்பாக இருக்கும். அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வங்கி சேமிப்பு கணக்கு உயரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி

நேயர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். யாருடனும் வம்பு வழக்கு வேண்டாம். உடல் சோர்வு நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். தேவையில்லாத செயலில் ஈடுபட வேண்டாம். கோபத்தை விட்டுவிடுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் சில மனசங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்ய முடியும். சொத்து தொடர்பான சிக்கல் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர்களால் அலைச்சலும் செலவும் ஏற்படும். கணவன், மனைவி உறவு பலப்படும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version