Home இலங்கை சிங்கள மொழி படிவத்தில் நான் தமிழன் என்பதை உறுதிப்படுத்திய யாழ் மைந்தன்

சிங்கள மொழி படிவத்தில் நான் தமிழன் என்பதை உறுதிப்படுத்திய யாழ் மைந்தன்

0

யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார்.

அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் அந்த குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவ் இளைஞன் வெளியிட்ட முகநூல் பதிவில்,

சிறிய வாகன விபத்து ஒன்றிற்காக claim எடுப்பது தொடர்பாக யாழில் உள்ள ஒரு insurance நிறுவனத்திற்கு சென்ற போது பொலிஸ் ரிப்போட் எடுக்க வேண்டும். இந்த படிவத்தை நிரப்பி கொண்டே பொலிஸ்ல ரிப்போட் எடுத்திட்டு வாங்க என்று சொல்லி அங்கே வேலைக்கு நிற்கும் பெண் இந்த படிவத்தை தந்தார்.

நான் கேட்டன் உன்ட தாய்மொழி தமிழ் என்ட தாய்மொழி தமிழ் யாழ்ப்பாணத்தில நிர்வாக மொழி தமிழ். ஆனால் நீங்கள் தந்திருக்கும் இந்த படிவம் என்ன மொழி முடிந்தால் கொழும்பில் உள்ள உங்களுடைய கிளையில் தமிழ் படிவத்தை கொடுத்து இதை நிரப்பி கொண்டு போய் கொடுக்க சொல்லி ஒரு சிங்களவரிடம் கொடுக்க முடியுமா என கேட்டதாக கூறியுள்ளார்.

அத்துடன் தனியார் நிறுவனமாக இருந்தாலும் இங்கே உங்கள் சேவை தமிழர்க்கு தான் வழங்குகின்றீர்கள் எனவும் அவ் இளைஞர் கூறியதுடன், ஒரு தமிழ் படிவம் தயாரித்து தமிழர்களிடம் கொடுக்க முடியாமல் நீங்கள் எல்லாம் என்ன செய்கின்றீர்கள் எனவும் அவர் கட்டாயமாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version