வடக்கு, கிழக்கு மாகாணங்கள் -கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது

வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.

இதனால் இன்று (20) முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நெல், வெங்காயம், உழுந்து ஆகிய பயிர்களின் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு தமது அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும்,

மழை கிடைத்தால் அது வேகமான காற்றுடன் கூடிய மழையாகவே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version