Home இலங்கை கிளிநொச்சியில் தென்னந் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்

கிளிநொச்சியில் தென்னந் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்

0

நேற்று இரவு பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் தென்னந் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்த நிலையில் 35 தென்னை மரங்கள் அழக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அந்த கிராமத்தில் வாழும் பெருமளவான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளாந்தம் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேற்றிரவு தென்னந் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 35 க்கும் மேற்பட்ட தென்னைகளை நாசம் செய்துள்ளது.

இதேபோன்று நாளாந்தம் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்ட சில காலங்களுக்குள் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இந்த காட்டு யானைகளால் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் என்பது அதிகரித்து காணப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை எந்தவிதமான நட்டஈடுகளும்வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version