வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம்…

மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாதத்துடன் இது ஒன்று இருந்தாலே போதும் சுவையாக இருக்கும்.இதனை எண்ணெயில் பொறித்து எடுத்து மொறு மொறுப்பாக தனியாக சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.

அரிசி, உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி மற்றும் உளுந்தம் பருப்பு கொண்டு பல்வேறு முறையாக இந்த அப்பளத்தை தயாரிப்பார்கள்.

தேவையான பொருட்கள்:

1 கப் அரிசி மாவு
1 தேக்கரண்டி சீரக விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
1/2 தேக்கரண்டி எள் விதை
தேவையான அளவு உப்பு
2 கப் நீர்

rice appalam recipe in tamil: இனி அப்பளம் கடையில் வாங்க வேண்டாம்...  வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் எப்படி செய்யலாம்... - rice appalam - arisi  vadagam recipe in tamil | Samayam ...

செய்முறை:

அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், எள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கட்டி விழாதவாறு நன்கு பிசைய வேண்டும்.

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிசைந்த மாவை தட்டில் வைத்து 10 -15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

அதன் பின்பு வேக வைத்த மாவை எடுத்து சூரிய ஒளியில் 2 -3 நாள்கள் உளர வைக்க வேண்டும்.

நன்கு உளர்ந்த பிறகு அதனை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Exit mobile version