பேருந்திற்காக காத்திருந் ததந்தையும் மக்களும் மீது பாரவூர்தியொன்று மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே மரணம்

இன்று காலை 9 மணியளவில் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கோர விபத்து - இளம் பெண் பரிதாபமாக பலி - ஜே.வி.பி நியூஸ்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் மோதியுள்ளது.

விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளார்.

அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரவூர்த்தி அதி வேகமாக வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.