Home தொழினுட்பம் வாட்ஸ்அப்பில் வர உள்ள 5 புதிய பயனுள்ள அம்சங்கள்!!!

வாட்ஸ்அப்பில் வர உள்ள 5 புதிய பயனுள்ள அம்சங்கள்!!!

0

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக காணப்படுவது வாட்ஸ்அப். பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.

முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

இந்நிலையில் பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் 5 புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

செர்ச் மெசேஜ் ஷார்ட்கட்:

இந்த அம்சத்தில் ஒரு நபரிடம் பேசிய உரையாடலில் இருந்தும் குறிப்பிட்ட மெசேஜ்ஜை எளிதாக தேடி எடுக்க முடியும். ஏற்கனவே இந்த அம்சம் இடம்பெற்றிருந்தாலும். தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் தரப்படவுள்ளது. இன்று முதல் சில பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

செர்ச் மெசேஜ் ஷார்ட்கட் அம்சம்

மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ்:

வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களுக்கு ரியாக்‌ஷன்ஸ் அனுப்பும் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ளது போல இருக்கும் இந்த அம்சத்தில் 6 எமோஜ்ஜிக்களை ரியாக்‌ஷனாக அனுப்ப முடியும். இதே அம்சம் டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பிலும் வரவுள்ளது.

கேமரா மீடியா பார்:

ஒரு நபருக்கு எளிய முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவதற்காக இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமோஜி ஷார்ட்கட்ஸ்:

எமோஜிக்களை விரைவாக பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் வரவுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் சில குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்வது மூலம் எமோஜிக்கள் காட்டப்படும். அதை கிளிக் செய்து விரைவாக அனுப்பலாம்.

புதிய வாய்ஸ் கால் யூ.ஐ:

தற்போதுள்ள வாய்ஸ் காலின் தோற்றம் மாற்றப்படவுள்ளது. வீடியோ கால்களுக்கு வருவது போன்ற ஒரு யூசர் இன்டர்ஃபேஸை வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதேபோன்று குரூப் காலில் யார் பேசுகிறார்களோ அவர்களது புகைப்படத்தில் வேவ் போன்ற தோற்றம் வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version