Home இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக நான்கு பேர் பதவி உயர்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக நான்கு பேர் பதவி உயர்வு!

0

வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (27), ஞாயிற்றுக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version