இலங்கையில் டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்
இன்றும் (02) நாளை(03)யும் டீசல் ஏற்றிய மேலும் 02 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஓட்டோ டீசலும் 7000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஒல்கா தெரிவித்தார். மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசலும் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 9000 மெட்ரிக் தொன் எரிபொருளும் உள்ளதாக அவர் கூறினார்.
இந்த இரு கப்பல்களுக்குமான கடன் கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் ஏற்றிய மேலும் 02 கப்பல்கள் எதிர்வரும் 06, 07 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.