Home உலகம் ஐரோப்பா நேரடி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் – புடினுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு!

நேரடி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் – புடினுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு!

0

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில்,

ரஷ்ய அதிபர் புடின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். அது ஒன்றே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி.

ஆனால் அந்த பேச்சுவார்த்தை 30 மீட்டர் இடைவேளியில் அல்ல. நான் கடித்துவிட மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 9 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. இதேவேளை போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது.

இந்நிலையில், சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version