தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது மூர்ப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது.மேலும்
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று நடுங்கமுவ ராசா தனது 69ஆவது வயதில் இன்று காலை 5.30 மணியளவில் இந்த யானை உயிரிழந்துள்ளது.
கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை தாங்கிச் செல்லும் நடுங்கமுவ ராசா என்ற யானையே உயிரிழந்துள்ளனது.
இறந்த யானையின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என யானையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நடுங்கமுவ ராசா என்ற யானை கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை 13 தடவைகள் தாங்கிச் சென்றுள்ளது. நடுங்கமுவ ராசா தெய்வீகம் பொருந்திய யானையாக சிங்கள மக்களால் பார்க்கப்படுகிறது.
இதன் உயிரிழப்பானது ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.