கிளிநொச்சியில் பறக்க முடியாத நிலையில் ஆந்தை குஞ்சு மீட்பு!!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பறக்க முடியாத நிலையில் நேற்று இரவு(08)புதன்கிழமை ஆந்தை ஒன்று தஞ்சமடைந்துள்ளது.

குறித்த ஆந்தையினை மீட்ட பொலிஸார் அதனை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆந்தை குஞ்சு மருத்துவ சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை வைத்திய நிலையத்தில் அதிகாரிகளால் கையளிக்கப்பட்டுள்ளது .