Home இலங்கை போலி அடையாள அட்டை – ஆரம்பிக்கும் விளையாட்டுகள் யுவதி ஒருவர் கைது!

போலி அடையாள அட்டை – ஆரம்பிக்கும் விளையாட்டுகள் யுவதி ஒருவர் கைது!

0

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் யுவதி ஒருவர் தங்கி இருந்துள்ளார்.

அவரது நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் போது குறித்த யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனை கண்டறிந்த காவல்துறையினர் , யுவதி காண்பித்த மாணவி அடையாள அட்டையும் போலியானது என கண்டறிந்துள்ளனர்.

அதனை அடுத்து யுவதியை கைது செய்த காவல்துறையினர் , விசாரணைகளின் பின்னர் யாழ், நீதிமன்ற நீதவான் முன்னிலையில் யுவதியை முற்படுத்தியதை அடுத்து , நீதவான் யுவதியை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version