Home விளையாட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு!

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு!

0

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் அனைத்து வகை இருந்தும் ஓய்வு பெற்றார்.

39 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2006ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

டோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார்.

இதுவரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார்.

சூதாட்ட குற்றச்சாட்டுகளால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டுள்ளது.

அதிலிருந்து மீண்டு முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஸ்ரீசாந்த், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீசாந்த், இந்தியாவுக்காக விளையாடி எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன், என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version