இலங்கை மின்சார சபைக்கும், இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை சம்பூரில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது.
திருகோணமலை, சம்பூரில் உள்ள சூரிய சக்தி நிலையம் தொடர்பான ஆரம்ப விவாதங்கள், இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய எரிசக்தி நிறுவனமான NTPC லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமானது.
கடந்த அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் அரசாங்கத்தின் தற்போதைய 50 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் நிலைய முயற்சியின் கீழ் சோலார் பார்க் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.