Home தொழினுட்பம் இன்ஸ்டாகிராம் சேவைக்கு வந்த அதிரடி அறிவிப்பு

இன்ஸ்டாகிராம் சேவைக்கு வந்த அதிரடி அறிவிப்பு

0

உலகம் முழுவதும் பலகோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ தங்கள் தளத்தில் வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான பதிவுகளை சகித்துக்கொள்ள மாட்டோம் எனரஷியா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய அதிபர் புடின், அந்த நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிறநாட்டு தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு பதிவுகளை வெளியிட அனுமதிப்பதாக ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ நிறுவனங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன.

இதனால் ஆத்திரமடைந்த ரஷியா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் நாடு முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி, “ரஷியாவில் 8 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வரும் நிலையில், இந்த முடக்கம் தவறானது” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version