இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் போட்ட முதலாவது நிபந்தனை!

அடுத்தவாரம் பயணம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளினால் இலங்கை அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது நிபந்தனையாக சகல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (வட்) 15 சதவீதமாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டடுள்ளதாக அறிய முடிகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியின் பயணத்தின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Exit mobile version