Home இலங்கை 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி மாணவி ஒருவர் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்

47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி மாணவி ஒருவர் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்

0

முல்லை மாவட்டத்தில் மாங்குளம் – பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையில் 1975 ஆண்டிற்கு பின் 2021 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையில் தவசீலன் புவணாயினி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

47 ஆண்டுகளின் பின்னர் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி  புவணாயினி! - ஜே.வி.பி நியூஸ்

1975ம் ஆண்டிற்கு பின்னர் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் கடந்த 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி மாணவி சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி. த.புவணாயினிக்கு பாடசாலை சமூகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,கல்வியாளர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version