Home விளையாட்டு 50 க்கு கீழ் சென்ற விராட் கோலி

50 க்கு கீழ் சென்ற விராட் கோலி

0

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ரன், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார். .

குறைந்த ரன்னில் வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ரன்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ரன்கள் (சராசரி ரன் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ரன் சராசரியை தக்க வைத்திருப்பார்.

மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இனி ஐ.பி.எல். போட்டி வரப்போவதால் அடுத்த சர்வதேச சதத்திற்கான வாய்ப்பை பெற ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டியது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version