போன் என்பது பின்னிப்பிணைந்த ஒரு பொருளாக மாறிவிட்டது.புதிதாக ஸ்மார்ட் போனை நாம் வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயங்கள் என்னென்ன?
அமைப்பு
போன் உருவாக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு அதன் வாழ்தகவை நிர்ணயிக்கின்றது. தற்போது சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் தரத்திலான கட்டமைப்பே பெரும்பாலும் காணப்படுகின்றது. நீங்கள் அடிக்கடி போனை கீழே விழுத்துபவராயின் மேற்குறிப்பிட்ட இரண்டில் ஏதாவதொன்றை தேர்வு செய்யலாம்.
டிஸ்ப்ளே
ஸ்மார்ட்போனின் அளவும் டிஸ்பிளேயும் உங்கள் தேவையையும் பாவனையையும் பொறுத்தது. நீங்கள் அடிக்கடி வீடியோ பார்ப்பவராயின் அல்லது சமூக வலைத்தளத்தை பாவிப்பவரானால் அல்லது படங்கள் எடிட் செய்பவராயின் நீங்கள் 5.5 அல்லது 6 இன்ச் டிஸ்பிளேயிலுள்ள போன் வாங்கலாம்.
கமரா
அதிக மெகாபிக்சல் கொண்ட கமராவால் மட்டுமே அழகான புகைப்படங்களை எடுக்கமுடியும் என்பதில்லை. அதிக மெகாபிக்சல் கொண்ட கமராவால் புகைப்படம் எடுக்கும் போது படம் பெரிதாக இருக்கும், உங்களது சிறிய ஸ்கிரீனில் பார்க்கும் அது மிகவும் ஷார்ப்பாகவும் தெளிவாகவும் இருக்கும். நீங்கள் ஒரு புகைப்பட விரும்பியானால் 16 அல்லது அதற்கு மேற்பட்ட கொண்ட போனை வாங்கலாம்.
ஓ.எஸ்
எப்போதும் அன்ரொய்டடின் சமீபத்திய இயங்குதளம் உள்ள போன் வாங்குவது சிறந்தது. அதன் அப்டேட்கள் உங்களுக்கு புதுவிதமானதும் பாதுகாப்பானதுமான உணர்வைக் கொடுக்கும்