கோவிலில் இதற்காகத்தான் மணி அடிக்கின்றார்களா??

நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திக்க நாம் கோயிலுக்கு செல்கிறோம். கோவில் நம்முடைய மனதின் எண்ணங்களை ஒருங்கிணைத்து மனதில் எழும் குழப்பங்களை தீர்த்து வைக்கும். மனஅழுத்ததோடு கோவிலுக்கு செல்பவர்கள் மனஅழுத்தம் நீங்கி சந்தோஷமாக வீட்டிற்கு செல்வார்கள்.

கோவில் என்பது மனிதனின் எண்ண அலைகளை சாந்தப்படுத்தும் மிகப்பெரும் சக்தி கொண்டது. இறைவனை நினைத்து மனமுருகி கோவிலுக்கு செல்பவர்கள் நினைத்ததை எல்லாம் கடவுள் நிறைவேற்றி கொடுப்பார்.

கோவிலில் அனைவரும் முக்கியமாக பார்ப்பது பூஜை செய்வது. பூஜை செய்யும் பொழுது கோவிலில் மணி அடிப்பார்கள். அப்படி கோவிலில் மணி சத்தம் அதிரும் பொழுது ஓம் என்ற பிரணவம் எழும்.

மனதை ஒருமுகப்படுத்தி இறைவனுடன் கருத்தொருமித்து இருக்கும் பொழுது நாம் இதை கேட்கலாம். இதற்கு எல்லாமே நானே என்பது அர்த்தம், இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை நமக்கு உணர்த்துவதே இந்த மணி சத்தம்.

அதுமட்டுமல்லாமல் கோவிலில் பூஜை செய்யும் பொழுது எல்லோருக்கும் கோவிலுக்கு செல்ல இயலாது. அத்தியாவசிய வேலையாக இருப்பவர்கள், நோயுடன் வீட்டில் கட்டிலில் படுத்திருப்பவர்கள்,வயதான முதியவர்கள் போன்றவர்களுக்கு எல்லா நேரங்களிலும் கோவிலுக்கு சென்று பூஜை காண முடியாது. அப்படி கோவில் மணி அடிக்கும் பொழுது இவர்கள் தங்கள் இடத்திலிருந்தே இறைவனை மனதில் நினைத்து வேண்டுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதனால் இறைவனை கண்ட திருப்தி அவர்கள் மனதில் ஏற்படும்.

Exit mobile version