உலகில் கழுத்து வலி என்பது மிக சாதாரணமாகி விட்டது .பலர் எந்நேரமும் லேப்டாப் உபயோகிப்பதாலும் ,கம்ப்யூட்டர் முன்பு நாள் கணக்கில் இருப்பதாலும் கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர் ஆரம்ப நிலையிலே கழுத்து வலியை கண்டறிந்து விட்டால் , சில கை வைத்தியம் மூலம் வீட்டிலேயே சரி செய்யலாம் .அதற்கான சில வழிகளை கூறுகிறோம்
1.ஐஸ் பேக்ஸ் (ஐஸ் கட்டி) கழுத்து வலியுள்ள இடத்தின் மீது வைக்க, வலி மற்றும் வீக்கம் குறையும். ஒரு பிளாஸ்டிக் பையில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை வைத்து அதை தலையனை உரைக்குள் வைக்கவும். உங்கள் கழுத்து பகுதி அதில் படும் படி ஓய்வெடுக்கவும். சில நிமிடங்களிலேயே மாற்றத்தை உணரலாம்.
2.மன அழுத்தமும் கழுத்து தசை பிடிப்பை உண்டாக்கும். அதனால் உங்களை பாதிக்கும் மன அழுத்ததிற்கான காரணங்களை கண்டறியுங்கள். பிறகு, உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை பற்றி ஆக்கபூர்வமாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் நண்பர் அல்லது நெருக்கமான நபருடன் உங்கள் வருத்தத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வலி குறைவதை காணுங்கள்
3.வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதனால் ஒரு சூடான தண்ணீர் பாட்டிலை வலியுள்ள பகுதியில் வைக்க ,அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து வலிக்குறையும்.அது மட்டுமல்லாமல் சில யோகாசன பயிற்சிகளும் இதற்கு நல்ல தீர்வை கொடுக்கும் .