பிந்திய செய்திகள்

இலங்கையின் பிரபல பத்திரிகைகள் இரண்டு அச்சுப்பதிப்புகளை நிறுத்தியது!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.

அதன்படி உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் என்றும், அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்கு காரணம் எனவும் அவை அறிவித்துள்ளன.

அதேசமயம் இலங்கையின் பல்வேறு கொள்கைகளை கொண்ட நாளிதழ்கள் விலைகள் அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் இருந்து அச்சுத்தாள்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாகவும் தங்கள் பக்கங்களை குறைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts