இலங்கையிலும் இப்படியா? சிக்கிய இளைஞன்!

நேற்றைய தினம் வியாழக்கிழமை (31-03-2022) மதியம்
இலங்கையில் பல பகுதியில் நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு, சம்மாந்துறை, உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காரைதீவு விசேட பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 22 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குறித்த இளைஞனிடம் இருந்து இதுவரை 15 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Quantcast
Exit mobile version