இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யும் அரிசி

பொருளாதா நெருக்கடியின் காரணமாக பல்வேறு நாடுகளிடம் சிறி லங்கா அரசாங்கம் கடன்களையும் பல்வேறு உதவிகளையும் பெற்று வருகிறது.அதன்படி இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்தவாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது முதலாவது கட்ட அரிசி தொகை என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுமார் 40,000 மெற்றிக் டன் அளவானநாடு, சம்பா, வெள்ளை அரிசி ஆகிய அரிசி வகைகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.

அவற்றை உடனடியாக மக்களுக்கு சலுகை விலையில், விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version