இனி இரவுவேளையில் ஏடிஎம் இல் பணம் எடுக்க முடியாதா??

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக இரவு வேளைகளில் ஏடிஎம் இயந்திரங்கள் பணம் எடுப்பது நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. இந்நிலையில் அவற்றுக் கான எரிபொருளைப் பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தொழிற்சங்கச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில வங்கிகளின் நடவடிக்கைகளே இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

இரவில் வங்கிகள் மூடப்பட்டு ஏடிஎம்கள் செயற்பட வேண்டும் என்றாலும், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது இயந்திரங்கள் பழுதடையும் என அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை சில வங்கிகள் இரவு நேரங்களில் இயந்திரங்களை நிறுத்துவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version